‘எழுத்தாளர்கள் ஒரு தனிவார்ப்பு, அவர்கள் கருவிலேயே திருவுடையவர்கள், எழுதுவது ஒரு தவம்’ என்கிற அலட்டல்களையெல்லாம் தாண்டி காட்டுச்செடி போல எவர் தயவுமின்றி எழுத வந்திருப்போரில் கவனம் கொள்ளத்தக்கவராக எழில்வரதன் தனது கதைகளின் வழியே வெளிப்பட்டிருக்கிறார்.
இவரது கதைகள் மரபு, ஒழுங்கு, புனிதமென்று இதுகாறும் பொத்திப் பொத்தி கட்டமைத்தவையெல்லாம் எத்தனை அபத்தமானவை என்பதை தமிழ்ச் சிறுகதைகளில் அருகிப் போய்விட்ட அங்கத நடையில் அம்பலப்படுத்துகின்றன.
- ஆதவன் தீட்சண்யா
Be the first to rate this book.