மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பாலோ கொயலோவின் இந்த அற்புதப் படைப்பு, ஒரு பெரிய பொக்கிஷத்தைத் தேடிக் செல்ல விரும்புகின்ற, ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த ஓர் இடையனான சான்டியாகோ வின் கதையை எடுத்துரைக்கிறது. அவனுடைய தேடல், அவன் கற்பனை செய்துள்ளதைவிட அதிக வித்தியாசமான, அதிக மனநிறைவு அளிக்கின்ற செல்வ வளங்களுக்கு அவனை வழிநடத்திச் செல்லும். நாம் நம்முடைய இதயம் கூறுவதைக் காதுகொடுத்துக் கேட்பது, வாய்ப்புகளை அறிந்து கொள்ளுவது, வாழ்க்கைப் பாதை நெடுகிலும் பரவிக் கிடக்கின்ற சகுனங்களைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொள்ளுவது, மிக முக்கியமாக, நம்முடைய கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சான்டியாகோவின் பயணம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 32 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். பாலோ கொயலோவின் தலைசிறந்த நூலான ‘ரசவாதி’ மற்றும் ‘வில்லாளன்’ ஆகிய நூல்கள் ஏற்கனவே மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீட்டில் தமிழில் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.