சந்தியாகோ என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவன் இதுவரை யாருமே கண்டிராத பொக்கிஷம் ஒன்றைத் தேடிச் செல்கிறான். ஸ்பெயினில் உள்ள தன் வீட்டிலிருந்து கிளம்பி டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களுலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸவாதியைச் சந்திக்க வைக்கிறது. நம் இதயம் கூறவதை நாம் இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்க வேண்டும். வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும், அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று.
நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 83 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 32 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். பாலோ கொயலோவின் தலைசிறந்த நூலான ‘ரசவாதி’ மற்றும் ‘வில்லாளன்’ ஆகிய நூல்கள் ஏற்கனவே மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீட்டில் தமிழில் வெளிவந்துள்ளன.
Be the first to rate this book.