வேதியியல் துறையின் அஸ்திவாரம், சாதாரண மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உணவு உற்பத்தி, மூலிகை மருத்துவம் போன்றவற்றின் மூலமாகத் தொடங்கிய வேதியியல், மற்ற துறைகளிலும் தாக்கம் செலுத்தி மனித வாழ்வை செழுமைப்படுத்தியது. இந்த நிலையில் காரீயத்தைத் தங்கமாக மாற்ற முயற்சித்த இஸ்லாமிய ரசவாதிகளை, அறிவியலின் வரலாறு குறைத்து மதிப்பிடும் போக்கை பரவலாகக் காண முடிகிறது. ஆனால், வீட்டு அடுக்களையும் ரசவாதிகளின் ஆய்வகங்களும்தான் நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல் ஆய்வுக்கூடங்கள் என்பதை மறுக்க முடியாது.
Be the first to rate this book.