தமிழகம் தந்த ஆன்மிகச் செம்மல்களுள் ராமானுஜர் மிக முக்கியமானவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரளவுக்கு சீர்திருத்த நோக்குடனும் புரட்சி மனப்பான்மையுடனும் இருந்தவர்கள் யாரும் இல்லை.
எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் ராமானுஜர் பயப்பட்டதில்லை. தன் குருவாகவே இருந்தாலும் தர்க்கம் செய்து, தனக்குச் சரி என்று பட்டதைச் சுட்டிக்காட்டும் துணிவு மிக்கவராக அவர் இருந்தார்.
ஓர் அமைதிப் புரட்சியாளராக ராமானுஜர் அவதாரம் எடுத்தது இந்தப் புள்ளியில்தான். அக்கிரமங்கள் எந்த வடிவில் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்க்க ஆரம்பித்தார். மனிதர்களைப் பிளக்கும் ஆயுதமாக மதத்தைப் பயன்படுத்துபவர்களை மிகக் கடுமையாகச் சாடினார்.
படித்தவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த ஆன்மிக ரகசியங்களையெல்லாம் படிக்காத, பாமர மக்களுக்கும் ஆர்வத்துடன் கொண்டு சென்றார். தித்திக்கும் மொழியில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு இதோ!
Be the first to rate this book.