தமிழகத்தில் பிறந்தவர். அறிவாளிகளின் தத்துவ விசாரணையாக இயங்கிவந்த விஷயத்தை எல்லாம் ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றியவர். சொல்வதன் சிறப்பு செயலில்தானே இருக்கிறது! அதன்படி வாழ்ந்த ஞான சூரியன். இவர் தோற்றுவித்த 'விசிஷ்டாத்வைதம்' என்பது வெறும் கொள்கை முழக்கமல்ல; வழிகாட்டும் தத்துவ விளக்கம். முற்போக்கான சீரிய நெறி! தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக கடந்த நூற்றாண்டில் செயல்பட்டதென்றாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆலயங்களில் ஹரிஜனப் பிரவேசத்துக்கு வழிவகுத்தவர் என்பது சரித்திர உண்மை. ராம ராஜ்யம் என்று காந்தியடிகள் சொன்னாரே! அது ராமானுஜர் வகுத்த வைஷ்ணவ மதத்தின் அரசியல் வியாக்கியானம்தான். எளிய நடையில் அரிய விஷயங்களைச் சொல்வதற்காக இந்நூலில் பெருமுயற்சி எடுத்திருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. இவரது எழுத்தை ரசிப்பதற்கென்றே பெருங்கூட்டமொன்று உண்டு. சிறப்பான படைப்புக்காக 'பாரதிய பாஷா பரிஷத்' விருது பெற்றவர் இவர்.
Be the first to rate this book.