ராமானுஜர் சோழ நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டாரா ? அல்லது சுயமாக முடிவெடுத்து வெளியேறினாரா?
கிருமிகண்ட சோழனின் உண்மையான பெயர் என்ன?
அந்தப் பெயர் சோழ மன்னர்களாலேயே வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டது ஏன்?
ராமானுஜர் எத்தனை வருடங்கள் தொண்டனூரிலும், மேல்கோட்டையிலும் வசிக்க வேண்டியதாயிற்று?
கஜினி முகமது காலத்திலேயே தென்னிந்தியா, குறிப்பாக மேல்கோட்டை, முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டதா?
களவாடப்பட்ட மேல்கோட்டை செலுவராயரைத் திரும்பப்பெற, ராமானுஜர் தில்லிக்குச் சென்றது உண்மையா?
பீபி (துலுக்க) நாச்சியார் செலுவராயரின் தாமரைத் திருவடிகளை அடைந்தாரா?
திருக்குலத்தார்- ஆசிர்வதிக்கப்பட்ட சந்ததியினர் என ராமானுஜரால் ஏன் பெயர் சூட்டப்பட்டுப் பாராட்டப்பெற்றனர்?
ராமானுஜர் காலத்திற்குப் பிறகு அவர் நிர்மாணித்த கோயில்களும் மடங்களும் நீர் நிலைகளான குளங்களும் திப்பு சுல்தானால் நிர்மூலமாக்கப்பட்டனவா?
எழுநூறுக்கும் மேற்பட்ட மண்டயம் ஐயங்கார்கள் திப்பு சுல்தானால் கொல்லப்பட்டனரா?
சிதம்பரத்தில் (திருச்சித்திரகூடம்) எழுந்தருளியிருந்த திருமால் திருமேனியைக் கடலில் எறிந்த சோழ மன்னன் யார்?
இவை போன்ற இன்னும் பல வினாக்களுக்கு, ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் சரித்திரபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் விடையளிக்கும் இந்தப் புத்தகம் சரித்திரமன்று; இதிகாசம், (இவ்வாறாக நிகழ்ந்தது) ராமானுஜ இதிகாசம்.
Be the first to rate this book.