-90களின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் நிலங்களைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்த அவலத்தையும் அதன் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் பற்றிய நாவல் இது. ரமணிகுளம் சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய மதராசபட்டினத்தின் கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியிலிருந்த குளமாகும். சுதந்திரமடைந்ததற்குப் பிற்பாடு குளம் மனிதர்களின் வசிப்பிடங்களாக்கப்பட்டதை இந்த நாவல் விவரிக்கிறது. மனிதர்கள், தாங்கள் அடைய விரும்பும் நிலத்தால் பறவைகளை, தானியங்களை, மரங்களை, தூய காற்றை, இருளை, ஒளியை, சகமனிதர்களை எப்படி இழக்கிறார்கள் என்பதையும் நாவல் பேசுகிறது. நிலமென்பது வெறும் இடமல்ல; அது தனிமனிதரின் கௌரவமான அடையாளம். மனிதர்களின் பேராசைகளை வளர்த்து, பிறரைத் துன்புறுத்தவும் வன்செயல்களில் ஈடுபடவும் தூண்டும் மாயை என்பதை ரமணிகுளம் காட்டுகிறது.
Be the first to rate this book.