முறையான தொடக்க கல்வி கூட கற்காத "கடாதர்' என்ற சிறுவன் எவ்வாறு உலகமறிந்த ஞானியாக இராமகிருஷ்ண பரமஹம்சராகப் பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
ராமனின் அவதாரமாக ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றியிருப்பதாக அவர் குழந்தையாக இருக்கும்போதே பலர் கருதியிருக்கின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பல சமயங்களில் கடவுளைக் காணும் "பரவசநிலை'க்கு உள்ளாகியிருக்கிறார்.
இந்நூல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்துமதம் மூலம் மட்டுமே கடவுளை உணரும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், மற்ற மதங்களின் மூலமாகவும் கடவுளை உணர விரும்பியிருக்கிறார்.
ராமகிருஷ்ணரைப் பொறுத்தமட்டிலும் ஒவ்வொருவரும் அவருக்குள்ளும், அவருக்கு வெளியேயும் கடவுளை உணர வேண்டும். கடவுளை ஒரு குறிப்பிட்ட பெயருக்குள்ளேயோ, வடிவத்திற்குள்ளேயோ சுருக்க முடியாது என்று கருதியதாக நூல் குறிப்பிடுகிறது.
ராமகிருஷ்ண பரமஹம்சருடன் சாரதாதேவி, விவேகானந்தர் உள்ளிட்டோரின் உறவுநிலைகள், ராமகிருஷ்ணரின் தத்துவங்கள், அவர் கூறிய நீதிக்கதைகள் என இந்நூல் ராமகிருஷ்ண பரமஹம்சரை முழுமையாக இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறது.
Be the first to rate this book.