வைரவன் லெ. ரா. - வின் சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பெங்களூருவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிகிறார். இலக்கிய வாசிப்புடன் தமிழில் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 'பட்டர்-பி & பிறகதைகள்' யாவரும் பதிப்பகம் வாயிலாக ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
இத்தொகுப்பில் இடம்பெறும் நாஞ்சில் நாட்டுச் சித்திரங்கள், நினைவுகளும் வீழ்ச்சிகளும் காலமாற்றமும் மனிதரின் இயல்புகளை மாற்றிவிடும் கதைகளை சொல்பவை. வட்டார வழக்கில் சொல்லப்படும் கதைகளில் வாசகனை உறுத்தாத மொழிநடை கைகூடியிருக்கிறது. பலரும் தீண்டத் தயங்கும் இடக்கரடல்களை பட்டவர்த்தனமாகப் பேசும் நெஞ்சுரம் வரவேற்கப்பட வேண்டியது. வசைச் சொற்கள் இனிமையாகஒலிக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும்வைரவனின் எழுத்து புதுயுகத்தின் நல்வரவுகளில் ஒன்று.
Be the first to rate this book.