இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்... என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா?
இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்... என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?
தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது!
எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
5 கட்டாயம் படிக்கவேண்டு
இந்த புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டுக்களும்,கல்வெட்டுச்சான்றுகளும் சிறப்பாக உள்ளது.
Saieeswaran B 26-07-2022 05:00 pm
5
இதுநாள்வரை ராஜராஜ சோழன் திராவிட ஆதரவாளர்கள் கூறுவதுபோல் பிராமண அடிமை என நினைத்து இருந்தேன். ஆனால் அவர் பிராமண அடிமை என்பதற்கு எந்த ஒரு கல்வெட்டு ஆதாரத்தையும் திராவிட ஆதரவாளர்கள் வெளியிடவில்லை. ஆனால் ராஜராஜசோழன் பிராமண அடிமை இல்லை என்பதற்கு பல ஆதாரங்களை காட்டுகின்றனர். திராவிட புரட்டுகள் மெல்ல மெல்ல வெளியே வருகிறது.
ILAKKIANATHAN 24-09-2021 01:06 pm
5 வாழ்க தமிழ்
ஆரியனுக்கும் திராவிடனுக்கும் தமிழர், தமிழர் வரலாறு ,பெருமை என்றாலே ஒவ்வாமை . ஆரியனுக்கு தான் ஒரு தமிழனுக்கு அடங்கி இருந்ததை மறைக்க வேண்டும். திராவிடனுக்கோ தங்கள் இயக்கமும் தலைவர்களுமே தமிழ் நாட்டைக் காப்பறினார்கள் என்ற பொய் பிம்பத்தை கட்டமைக்கச் செய்து அதன் மூலமாக தமிழர் அல்லாதவர்களை இங்கே வசதியாக வாழவும் ஆளவும் வைக்க வேண்டும் காரணங்கள் வேறு, ஆனால் நோக்கம் ஒன்று தான். தமிழும் தமிழனும் எழுச்சி பெற்று வளரக் கூடாது என்பது தான் அதனால் தமிழர்களுக்கு என்று பெருமையோ வரலாறோ இல்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு இழிவான வரலாறு என்று தமிழனை மடை மாற்றி அவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார்கள். அதில் ஒன்று தான் தமிழ் மன்னன் ராஜராஜ சோழன் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் . அப்படி அவர்களால் பரப்பப்படும் இன்றைய பொய்களை, நேற்றைய வரலாற்றை கொண்டு உடைக்க நான் எடுக்கும் சிறு முயற்சியே நாணய ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜராஜ சோழன் இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும் என்ற நூலுக்கான எனது இந்த புத்தகம் அறிமுகம். இராஜராஜ சோழன்- நூல் அறிமுகம் : இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும் - இரா.மன்னர் மன்னன் (Tamil Edition) https://www.amazon.in/dp/B09FZCYRR2/ref=cm_sw_r_apan_glt_V69J687MR3JQE3C7KGY2
Kodeeswaran 15-09-2021 04:49 pm