இது முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான வாழ்க்கை வரலாறு. தனிமனித வாழ்க்கையின் அகம் புறம் சார்ந்த அனுபவங்களின் ஊடே நிகழ்த்திய அனுபவங்களின் அடுக்கடுக்கான தொகுப்பு அல்ல. நவீன உலகின் நிகழ்வு களையும் மாற்றங்களையும், உள்வாங்கிக் கொண்டு அதன் வளர்ச்சிப் போக்கை இனம்கண்டு அடையாளப்படுத்தும் ஒரு தனிமனிதனின் வரலாறாக இது வடிவமைக்கப் பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. மனித வரலாற்றுப் போக்கில் தன்னைக் கரைத்துக் கொண்டு அறிவியல் ரீதியாக அந்த வரலாற்றை மதிப்பீடு செய்த ஒரு மனிதரின் வரலாறு இது. விருப்பு, வெறுப்புகளைக் கடந்து வரலாற்றின் இயக்கப் போக்கை உணர்ந்து சிந்தனா ரீதியாக இயங்கிய ஒரு மனிதரின் சாதனைகள் அடங்கிய ஒரு தொகுப்பாக இது உள்ளது.
ஆழமான அரசியல், சித்தாந்த, தத்துவக் கண்ணோட்டங்களை முன்வைத்துப் பேசும் இந்த வாழ்க்கை வரலாற்றைத் தெளிவான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்
Be the first to rate this book.