வழக்கறிஞர் தொழிலில் ராஜாஜி அடியெடுத்து வைத்தபோது, அவரை ஜூனியராக ஏற்றுக்கொள்ள பிரபல வழக்கறிஞர்கள் யாருமே முன்வரவில்லை. யாருடைய சிபாரிசும் வேண்டாம்; என் திறமையால் நான் முன்னுக்கு வருவேன் என்று அன்று உறுதி எடுத்துக்கொண்டார் ராஜாஜி.
அன்று ஆரம்பித்தது அவரது பயணம். அதற்குப்பின் ஒருவராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்கள் - யாராலும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இப்போது நானும் நாடும் இங்கே இருக்கிறோம். அடுத்து செல்லவேண்டியது எங்கே? தனக்குத்தானே இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு படிப்படியாக, நேர்த்தியாக முன்னேறிக் காட்டியவர் ராஜாஜி.
தெளிவான இலக்கு ஒன்றை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி நகர்ந்து செல்லும் வித்தையை ராஜாஜியிடமிருந்து கற்றுக்கொள்வது மிகவும் சுலபம்.
Be the first to rate this book.