சேலம் வட்டாரத்தில் உள்ள சித்தர்பட்டி எனும் மலைக்கிராமத்தில் உள்ளது. சித்தேஸ்வரர் ஆலயம். அக்கோயிலுக்கென்று சில ஆசாரங்கள் உண்டு. அதனை மீறுபவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது ஐதீகம். அங்குள்ள சுனைநீரால் தீராத நோய்களும் குணமாகி வந்தன, வைரவன் செட்டியரால் கோயில் மகத்துவம் வெளி உலகத்திற்கு தெரியவர, அவ்வூரிலும் அக்கோயிலிலும் பல மர்மங்கள் நடைபெறத் தொடங்கின. அம்மர்மங்களுக்குக் காரணம் சித்தர்களாக இருக்கும், இறைவனின் சக்தியாக இருக்கும் என ஒரு பக்கம் கருத்து நிலவ, மறுபக்கம் அது மனிதர்களுடைய வேலையாக இருக்கும் என்ற மனநிலையோடு பலர் அம்மர்மங்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
Be the first to rate this book.