வெகுஜன எழுத்தாளர்கள் எந்தளவுக்குச் சமூக நிகழ்வுகளுடன் ஒன்றியிருக்கிறார்கள் என்பதற்கு இந்த ‘ரகசிய விதிகள்’ மிகச் சிறந்த உதாரணம். போலவே வெகுஜன எழுத்தாளர்கள் எந்தளவுக்கு எதிர்கால சம்பவங்களை நிகழ்காலத்திலேயே அறிவிக்கிறார்கள் என்பதற்கும்.‘குங்குமம்’ வார இதழில் இந்தத் தொடர் வெளிவரத் தொடங்கிய சமயத்தில் சிலை திருட்டுக்குப் பின்னால் இருக்கும் மனிதர்கள், விஷயங்கள், காரணங்கள் குறித்தெல்லாம் பெரும்பாலான மக்கள் அறியாமலேயே இருந்தார்கள்.தகவல்களாக மட்டுமே தெரிந்திருந்த இந்தக் குற்றச்செயலைக் குறித்து முதன் முதலில் விரிவாக இத்தொடரில் எழுத்தாளர்(கள்) சுபா எழுத ஆரம்பித்தார்(கள்). இதன் பிறகு நடந்தது சரித்திரம். ஆம். அப்படித்தான் இதைப் பதிவு செய்ய முடியும். ‘ரகசிய விதிகள்’ பத்து அத்தியாயங்கள் கடந்த நிலையில் தமிழகம் முழுக்க ஹாட் டாப்பிக்காக ‘சிலை திருட்டு’ மாறியது. ஏராளமான பெரிய மனிதர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அனைத்து நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாக இதுவே மாறியது.
Be the first to rate this book.