உண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா?
ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா?
பதினாறு வயதில் தீக்க்ஷா அந்த வயதுக்கே உரிய கனவுகளுடனேயே வளர்ந்தாள். பள்ளி, , பையன்கள் மற்றும் தோழிகள் என்ற இன்பமயமான வட்டத்தைச் சுற்றித்தான் அவளுடைய வாழ்க்கை நகர்ந்தது.
ஆனால், அவையெல்லாம் திடீரென ஒரே நாளில் மாறிவிட்டன.
எந்த ஒன்று இயல்பான ஈர்ப்பாக ஆரம்பித்ததோ அது மெல்லக் கட்டுப்பாட்டை இழந்து வெடித்துவிட்டது. பதினெட்டு வருடங்கள் கழித்து வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களால் அவள் ஒரு தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்கிறாள். அவளுக்கென்று ஓர் ஆசைப் பட்டியல் பிறக்கிறது. அத்தனையும் ரகசிய ஆசைகள். எத்தனை விலக்கினாலும் நிழல் போலத் தொடர்ந்து வரும் ஆசைகள்.
ஆனால், அந்தப் பட்டியல் அவளுடைய வாழ்க்கையின் சிதறிப்போன துண்டுகளைப் பழையபடி ஒட்ட வைக்குமா?
திருமணத்துக்கு அப்பால் உள்ள சிக்கலான உறவுக்குள் அவள் சிக்கிக்கொள்வாளா?
ப்ரீத்தி ஷெனாய் நெஞ்சைத் தொடும் ஒரு தர்மசங்கடமான விஷயத்தைத் தன் உள்ளார்ந்த பார்வை மற்றும் புத்திக் கூர்மையுடன், நெஞ்சம் அதிரவைக்கும்படியான ஓர் அற்புதமான கதையாகத் தருகிறார்..
'ரகசிய ஆசைகள்' – உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால் முடிக்காமல் வைக்கமாட்டீர்கள். பரிசுத்தமான நட்பு, மெய்யான காதல் என்ற இரண்டையும் இதைவிட விறுவிறுப்பான மொழியில் விவரிக்கமுடியுமா என்ன.. வாய்ப்பே இல்லை!
Be the first to rate this book.