ரேடியோ பெட்டி என்ற இந்த நூல் பாட்டின் கதையும் பாடலாசிரியரின் கதையையும் பற்றியதாகும். கற்பனையில் மிதக்கும் கவிஞர்களால் மக்கள் ரசிக்கும் ஜனரஞ்சகமான படங்களை இயக்க முடியாது என்பது தயாரிப்பாளர்களின் கணக்கு. எனவே என் பாடல் முகத்தை மறைத்தபடியே உதவி இயக்குநராக வேலை செய்து கொண்டிருந்தேன். இயக்குநர் கே.ஜி. அசோக் அவர்கள், தனது ‘ஆயுள் ரேகை’ படத்திற்கு எனது ‘கொலகாரி வாரா’ மேடைப் பாடலை பயன்படுத்தியோடு, இன்னோர் புதிய பாடலையும் என்னை எழுதக் கேட்டபோது, சம்மதித்தால் இயக்குநராக முடியாது. சம்மதிக்கவில்லை என்றால் சோறு திங்க முடியாது என்ற நிலை. அப்போதுதான் திருமணம் வேறு எனக்கு நடந்திருந்தது. முன்பு பசிக்க என்னிடம் ஒரு வயிறு இருந்தது, இப்போது இரு வயிறு. சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா என்று யோசித்ததில் சாப்பாடு முக்கியமென்று முடிவெடுத்து
இந்தப் பாட்டுக் களத்தில் இறங்கினேன்.
– ஏகாதசி
Be the first to rate this book.