தொலைக்காட்சிக்கு முன்னோடி ரேடியோ. அதே சமயம், தொலைக்காட்சி வந்தபிறகும் இன்றுவரை ரேடியோவின் உபயோகம் குறைந்துவிடவில்லை. கையோடு கொண்டு செல்லலாம். காதோடு வைத்து கேட்டு மகிழலாம். அளவில் சிறியது. ஆனால், அது அளிக்கும் பலனோ மிகப் பெரியது. ரேடியோவில் வரும் வானிலை அறிக்கைகள் எந்த நேரத்தில் மழை, புயல் வரக்கூடும் என்று சொல்கின்றன. இப்போதெல்லாம் பெருநகரங்களில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்பதைக்கூட ரேடியோ மூலம் அறிவிக்கிறார்கள்.
பொழுதுபோக்குப் பயன்பாடுகளுடன், தகவல் தொடர்பு சேவைகளும் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன. இத்தனை முக்கியமான ரேடியோ எப்படி உருவானது? அது எப்படி இயங்குகிறது? அதன் பயன்கள் என்னென்ன? எல்லா தகவல்களும் எளிமையான சுவாரசியமான நடையில்.
Be the first to rate this book.