முருகனின் சிறுகதைகள் வடிவம் மற்றும் நடை ஆகிய அம்சங்களில் வெகு இயல்பான பரிசோதனைகளைக் கொண்டிருக்கின்றன.
காலம், களம் இரண்டும் அவருடைய படைப்பில் மனித மனம் போல எப்போதும் சலசலத்துக் கொண்டிருப்பவை.
அவரது உரைநடையில் ‘ஜம்ப் கட்’ உத்தி வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இது நனவோடை அல்ல. ஆனால், திட்டமிட்ட, எத்தகவலும், அநாவசியமாகப் பயன்படுத்தாத சேர்க்கை கொண்ட நடை.
இத்தொகுப்பிலுள்ள ஒரு கதையும் தவறிப் போவதில்லை. மிகவும் தேர்ச்சி பெற்ற படைப்பாளனுக்கே இது சாத்தியம்.
- அசோகமித்திரன்
1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.