தெற்கு தில்லியிலிருக்கும் குதுப் மினார் 73 மீட்டர் உயரமுடையது; 5 நிலைகளைக் கொண்டது. 1192 முதல் 1503 வரை 300 வருடங்களுக்கு மேலாக அது சிறிது சிறிதாகக் கட்டப்பட்டது. அதனருகில் ஒரு திறந்தவெளி மசூதி உள்ளது. அதன் சுற்றுப் பாதை அங்கு முன்பிருந்த கோவில்களிலிருந்து எடுக்கப்பட்ட தூண்களால் அமைக்கப்பட்டது. அதனருகில் செம்மணற்கல்லில் வேலைப்பாடுகள் கொண்ட பிற்காலத்திய கட்டடங்களும் உள்ளன. சற்றுத் தொலைவில் சூஃபி துறவியான குதாபுதீன் பக்தியார் காகியின் தர்க்கா உள்ளது. அவரது பெயரிலிருந்துதான் இந்த மினார் இந்தப் பெயரைப் பெற்றது. மஹ்ரோலி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமத்தின் அருகில் குதுப் பகுதி அமைந்துள்ளது. இந்தப் புத்தகம் குதுப் மினாரை மட்டும் பற்றியது.
Be the first to rate this book.