அவன் உங்களை அழைக்கும் நாளில் அவனைப் புகழ்ந்துகொண்டே நீங்கள் அவனிடம் ஓடி வருவீர்கள். வெகு சொற்ப நேரமே அன்றி தங்கியிருக்கவில்லை என்றும் நீங்கள் எண்ணுவீர்கள். (அல்குர்ஆன் 17: 52)
இஸ்லாமும் தஸ்பீஹும் ஸஜ்தாவும் தொழுகையும் இயற்கையோடு ஒன்றிசைந்து செல்கின்றன, ஒன்றோடொன்று நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன என்பதை இவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்களை நம்முடைய தலைவராக, இமாமாக இறைவன் ஆக்கியுள்ளான். அவர் எழுப்பிய இறையில்லத்தை நம்முடைய கிப்லாவாக ஆக்கியுள்ளான். அவருடைய வழிமுறையை நாம் கட்டாயம் பின்பற்றியாக வேண்டிய அரசியல் சாசனமாக ஆக்கியுள்ளான். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வொன்றை சுட்டிக் காண்பித்து குர்பானியின் மெய்நிலையை, உண்மை நிலையை நமக்கு விளக்குகிறான். அதனோடு இணைந்து தொழுகையின் உண்மை நிலையையும் விளக்கிக் கூறுகிறான்.
Be the first to rate this book.