அல்குர்ஆனை அணுகுவதற்கான பல்வேறு தடைகளில், தமிழ் பேசும் உலகைப் பொருத்தளவில் மொழியும் ஒன்று. உஸ்தாத் முஹம்மத் அஸத் குறிப்பிடுவது போன்று, அல்குர்ஆனை இன்னொரு மொழியில் முழுமையாக பெயர்ப்பது சாத்தியமில்லை. இவ்விடத்தில் தான், (தமிழ் மொழியிலான) அல்குர்ஆனிய விளக்கவுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை அல்குர்ஆனிய மொழிக்கு நெருக்கமாக எங்களை அழைத்துச் செல்கின்றன. அல்குர்ஆனுடன் எங்களை உறவாடச் செய்கின்றன.
தமிழ் பேசும் சமூகப் புலத்தில் பிறந்து, வளர்ந்து, அதன் கலாச்சாரங்களுடன் பரீட்சயப்பட்ட ஒருவரின் ஆக்கமாக அல்குர்ஆன் விளக்கவுரை அமையும் போது அது மேலும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. பேராசான் உஸ்தாத் மன்ஸூர் அவர்களின் "குர்ஆனிய சிந்தனை" இவ்வகையில் குறிப்பிடத்தக்கதொரு ஆக்கம். முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அங்கத்தவர் ஒருவரின் அல்குர்ஆனுடனான உறவாடல். அல்குர்ஆனிய சிந்தனையை தமிழ் பேசும் உலகிற்குள் பரவலாக கொண்டு செல்லத்தக்கதொரு நூல்.
- மனாசிர் ஸரூக்
Be the first to rate this book.