அல் குர்ஆன் ஒரு சமூகவியல் நூல். மறுஉலகின் விமோசனத்தையும் ஆன்மீக ஈடேற்றத்தையும் மட்டும் மையப்படுத்திப் பேசும் ஒரு மத நூலல்ல அது. சீரான சமூக வாழ்வை உருவாக்க அது முனைந்து நிற்கிறது. சீரானதொரு சமூக வாழ்க்கையின் மீதுதான் ஆன்மீக உயர்வும் மறுவுலக ஈடேற்றமும் அடையப்பட முடியும் என அது நம்புகிறது.
இந்த வகையில் அல் குர்ஆன் நீதியும் சமத்துவமுமிக்க சமுக அமைப்புக்காகப் போராடுகிறது. அதற்கான கோட்பாடுகளையும் வழிகாட்டல்களையும் அது முன்வைத்து அத்தகைய சமூகத்தையும் இறுதியில் தோற்றுவித்தது.
இந்த வகையில் அல் குர்ஆன் ஒரு சமூகவியல் நூல் என்ற இந்த உண்மையை மறந்து அதனை விஞ்ஞான உண்மைகளுக்கான நூலாகவும் வரலாறு அல்லது இலக்கிய நூலாகவும் காட்ட முயல்வது அல் குர்ஆனின் அடிப்படை இலக்கை விட்டு வழிபிறழ்வதாக அமையும்.
Be the first to rate this book.