தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக் கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் நூல்களில் இருந்து நூலாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார்.
“இந்தியா என்பது ஒரு தேசமல்ல, கற்பிதம் செய்யப்பட்டது’, “பிரிந்து செல்லும் உரிமை அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்திருக்காது’ என்பன போன்ற பல கருத்துகளை பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அரசியல் நிகழ்வுகளுடன் ஜின்னாவின் சோகமயமான தனிப்பட்ட வாழ்க்கையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.
Be the first to rate this book.