பல்லாயிரக் கணக்கானோர் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்ற ஆண்டு ஆகஸ்டு 15 சுகந்திர தினத்தைப் பெருமித்துடன் கொண்டாடும் ஒரு சராசரி இந்தியக் குடிமகனாகவே இருந்து வந்த நிலையில், 1947 விடுதலை என்பது பிரிவினையுடன் கூடிய ஒன்று என்ற கசப்பான வரலாற்றுச் செய்தியை அறிய நேர்ந்தது. மத அடிப்படையிலான அந்தப் பிரிவினை, இந்தியத் துணைக்கண்டத்து மக்களை இரு கூறுகளாக்கி, இன்று வரை ஒருவரை ஒருவர் எதிர்த்துப் பொருதி நிற்கும் அவல நிலையை அறிந்தபோது இதயம் வலித்தது. அந்தத் துயரமிகு நிகழ்வுகளுக்கு யாரெல்லாம், எவையெல்லாம் காரணம் என்னும் வினா வாட்டி வதைத்ததன் விளைவாக உருவானதுதான் இந்த நூல்!
Be the first to rate this book.