‘சமகால வரலாறு’ என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத்துறை. மேலைப் பண்பாடுகளிலும்கூடச் ‘சமகால வரலாறு’ அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் நாடகமும் எழுதி நன்கறியப்பட்ட தேவிபாரதி, இரண்டு அரசியல் நிகழ்வுகளைத் தம் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துப் பதிவுசெய்துள்ளார். ஒன்று நெருக்கடிநிலைக் காலகட்டம். மற்றொன்று 1984 தேர்தல். விரிவான சித்தரிப்புகளூடே சொல்லாமல் உணர்த்தும் பாங்கு அவரிடம் இழையோடுகிறது. அங்குமிங்கும் பொடிவைத்தது போன்ற அமர்த்தலான நகைச்சுவையும் தெறிக்கின்றது. சமகால வரலாற்றுக்கும் சுயசரிதைக்கும் இடைப்பட்ட ஒரு வெளியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார் தேவிபாரதி.
Be the first to rate this book.