புயலுக்குப் பின்…’ சிறார் நாவல், பெரியவர்களும் படித்துப் பயன் பெற வேண்டிய ஒரு சூழலியல் பிரச்னையை மையமாகக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தேர்வு செய்யும் போராட்ட வடிவம் அவர்களின் பெற்றோரையும், ஆசிரியர்களையும், ஊர் மக்களையும் உலுக்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கொதிநிலை அடையும் நீரின் கொந்தளிப்பைப் போல,குழந்தைகளின் மனக் கொதிப்பு உச்சத்தை அடையும் போது அவர்கள் நடத்தும் அறப்போராட்டம் ஊர் மக்கள் அனைவரையும் அதன் பின்னால் அணி திரளச் செய்கிறது.
– கமலாலயன்
Be the first to rate this book.