‘புயலிலே ஒரு தோணி’ கதை இரண்டாவது உலகப் போர் காலத்தையொட்டி மலேயா - இந்தொனேசியா பிரதேசத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு. இந்தக் கதையில் வரும் வரலாற்று நிகழ்ச்சிகள், ஆட்களைத் தவிர மற்றபடியான சம்பவங்களும் மாந்தரும் எதையும், யாரையும் குறிக்கவில்லை. சம்பவங்கள் கதைக்காக உருவாக்கப்பட்டவை. அவற்றை இயக்குவதற்காக உண்டாக்கப்பட்டவர்களே கதைமாந்தர்.
யுத்த காலத்தை எல்லாம் மலேயா - இந்தொனேசியா பிரதேசத்தில் கழித்த நான், அப்போது அங்கே பலவகையான ஆடவரையும் பெண்டிரையும் செயல்களையும் நிகழ்ச்சிகளையும் காண நேர்ந்தது. அதன் கற்பனை வடிவான சாரமே இந்தக் கதை. கதாநாயகன் யார்..? பாண்டியன்? யுத்தம்..? கதாநாயகி யார்..? அயிஷா? சமுதாயம்? அவரவர் விரும்புகிறபடி வைத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கதைக்கு கதாநாயகனோ, கதாநாயகியோ இல்லை.
Be the first to rate this book.