மணியின் கதைகள் சில சமயம் வேடிக்கை பார்ப்பவனின் பார்வையில் எழுதப்பட்டிருக்கும். சிலவற்றில் ஒரு வழிப்போக்கன் நமக்கு கதை சொல்லிச் செல்வான். எங்கோ ஒரு கலைமாணவன் ஆசை ஆசையாக அவன் கற்றதை நமக்கும் கடத்துவான். அவனே ஆசிரியனுமாகி நமக்கு பாடம் நடத்துவதுண்டு. எந்தவித கோட்பாடுக்குள்ளும் சிக்காத ஒரு பாமரன் அவனுக்கேயுரிய கிறுக்குத்தனத்துடன் சொல்லும் கதைகளும் நமக்குக் கிடைக்கும். நம்மை வியக்க வைக்கும் அபாரமான படைப்பாளியையும் பார்க்கலாம். நாம் எதிர்பார்க்காத சமயத்தில் வேதாந்தி ஒருவரையும் நாம் தரிசிக்க நேரும். இவை அனைத்தும் மணியின் எழுத்தில் நிகழும்.
- சுகா
Be the first to rate this book.