மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல் வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நினைத்து நல்லதைச் செய்பவர்களுடன் தொடர்பில் இருந்தால், எதிர் மறையான சிந்தனையைத் தவிர்த்து எப்போதும் நேர்மறையாக இருந்தால், வாழ்க்கையில் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அது சிறப்பாக மாறும் என நம்பினால், நல்ல வார்த்தைகளைப் பேசினால் நம் வாழ்வில் எல்லாமே நன்மையாக நடக்கும். சிந்திப்பது என்பது கடினமான விஷயம் இல்லை. மனிதர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் இயற்கையாகவே சிந்திக்கிறார்கள். ஆனால் நிலையான, உயர்தரமான சிந்தனைகளின் வழிநடப்பதுதான் முக்கியம். இந்த நூல் அப்படிப்பட்ட நல்லொழுக்கத்தையும் நல்லுரைகளையும் வழங்கும் நூலாகும். இது ‘FILLIPISMS' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாக நூலின் தமிழ்ப் பதிப்பாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், நல்ல சிந்தனை பலனளிக்கும் என்பதை வலிறுத்தும் இந்த நூலைப் படிப்பவர்களின் வாழ்வில் நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
Be the first to rate this book.