புது டில்லி ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நகரம். மகாபாரதக் காலத்தில் பதினெட்டு நாட்கள் போர் நிகழ்ந்து பலரின் ரத்தம் ஆறாக ஓடிய நகரம். காலம் காலமாக டில்லி ரத்தம் படிந்த பூமியாகவே இருந்து வருகிறது.
1984ஆம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி தன் இல்லத்தின் உள்வெளியில் சுட்டுக்கொள்ளப்பட்டார். பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தினார்கள். புது டில்லியில் ரத்தம்நெடி பல நாட்களுக்கு அடித்தது. இன்றும் அந்த குருதிவாடை அடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழலில் புது டில்லியில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தின் கதைதான் புது டில்லி என்ற நாவல். குடும்பமென்றால் சமூக கலாசார உளவியல் ரீதியில் பிரச்சினைகள் இருக்கின்றன. அது பலருக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிகிறது. தெரிந்திருந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி அது பெரிதாக வாழ்க்கையை மாற்றுவிடுவதில்லை. வாழ்க்கை எதன்பேரில் ஆதாரப்பட்டு இருக்கிறது என்பதும் தெரிவதில்லை. அது தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. சொல்லவே முடியாத வாழ்க்கையை சொல்லிப்பார்க்கிறது புது டில்லி நாவல்.
Be the first to rate this book.