செங்கோலைத் தாண்டி இன்றும் தம் அடையாளம் தேடுவோரா தமிழர்? இன்று நாம் ஒர் இரவுப் பயணத்துக்குள் கடந்து விடும் நிலப்பரப்பை, ஒரு காலத்தில் நான்கு மன்னர்கள் ஆண்டனர். அவர்களுக்கு விசுவாசமான குறு மன்னர்கள் அவர்களுக்கும் கீழே பெரு நிலக் கிழார்கள் என அதிகார மையங்கள் அனைத்தையும் மக்கள் ஏற்றார்கள். மன்னர்களுக்கு விசுவாசமாகவும் இருந்தார்கள். ஆனால் பண்பாடு, வழிபாட்டு அடிப்படையில் நாடுகளின் எல்லைகளைக் கடந்து தமிழர் தம் அடையாளத்தைத் தேடி, நிலைநாட்டிக் கொள்ளும் ஒரு மௌனப் போராட்டத்தையும் எப்போதுமே நிகழ்த்தி வந்தார்கள். அது இன்னும் தொடர்கிறது.
அரசு என்னும் ஒன்று நம் கவனத்தைப் பெறுவதும், அதைச் சார்ந்தே நாம் வாழ்வதும் தொன்று தொட்டே இருந்திருக்கிறது. இனியும் தொடரவும் செய்யும். அரசின் ஒவ்வொரு சிறிய முடிவும் நம்மையும் நமது வாழ்க்கையையும் நமது கனவுகளை வெகு தூரம் பாதிக்கிறது. பல்லவரிடமிருந்து சோழர் ஆட்சிக்கு, திருவள்ளரை (திருச்சி- துறையூர் சாலையில் உள்ள பாடல் பெற்ற வைணவத் தலம்) மாறியபோது அதன் ராஜ கோபுரம் கட்டும் பணி நின்றது. இன்றும் அது நிறைவுறாத கோபுரமாகவே காட்சி அளிக்கிறது. அந்தக் கோபுரம் நம் தமிழ் மக்கள் பற்றிய நம் புரிதலின் படிமமாகவே நம் முன் இன்றும் நிற்கிறது.
அந்தக் கோபுரம் எழும்பிய காலம், சமகாலம் மற்றும் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னான எதிர்காலம் ஆகிய மூன்றுமே இந்நாவலில் பல்வேறு சாளரங்களை நம்முன் திறக்கின்றன.
Be the first to rate this book.