புத்துயிர்ப்பு நாவல் ஆன்மாவின் வீழ்ச்சியைப் பற்றி பேசுகிறது, புறக்கணிக்கபடும் நீதியைப் பற்றி பேசுகிறது, குற்றமனப்பாங்கின் துயரத்தைப் பற்றி பேசுகிறது, காதலுக்காக ஒரு பெண் எதிர் கொள்ளும் அவமானங்களைப் பேசுகிறது.
ரஷ்யாவின் தெற்கு பகுதிகளில் வாழ்ந்து வந்த இடையர்களும் விவசாயிகளும் உருவாக்கிய ஒரு மதப்பிரிவே டுகோபார்ஸ், இவர்கள் கிறிஸ்துவர்களாக இருந்தாலும் தேவாலயம். மதச்சடங்குகள் பாதிரிகளின் கட்டுபாடுகள் யாவற்றையும் எதிர்த்தனர்; மனிதனின் மனதே ஆலயம், மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், ஆத்மாவை பலமாகவும், எளிமையாகவும் பரஸ்பர அன்பும் கருணையும் நிரம்பியதாகக் கொண்டிருக்க வேண்டும்; எந்தக் காரணம் கொண்டும் வன்முறை, கொலை கூடாது; மனிதர்களில் எவரும் உயர்வும் தாழ்வும் கிடையாது, ஆகவே தங்களை ஆத்ம போராளிகள் என்று அழைத்துக் கொண்ட இவர்கள் எலிஸ்தவ்போல். டிப்லிவஸ் போன்ற பகுதிகளில் விவசாயப் பண்ணை அமைத்துக் கொண்டு சிறுசிறு கிராமங்களாக வாழ்ந்தனர்.
காந்தி டால்ஸ்டாயிடம் இருந்து கற்றுக் கொண்ட பல விஷயங்கள் டுகோபார்ஸ் மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த வந்த பழக்கங்களே, இன்றும் கனடாவில் இருபதாயிரத்திற்கும் அதிகமாக டுகோபார்ஸ் பிரிவினர் வசிக்கிறார்கள், உலகெங்கும் அவர்கள் தாங்கள் வாழும் இடமெல்லாம் டால்ஸ்டாய்க்கு சிலை வைத்து வழிபடுகிறார்கள்; தங்களின் வேதப்புத்தகம் போல புத்துயிர்ப்பு நாவலை தினசரி வாசிக்கிறார்கள். தான் வாழும் சமூகத்திற்கு எழுத்தாளன் ஆற்ற வேண்டிய பங்களிப்பு என்ன, என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டியிருக்கிறது.
- எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.