இது டால்ஸ்டாயின் பத்தாண்டு காலக் கடின உழைப்பு மூலம் 1899-ல் ருஷ்ய மொழியில் வெளிவந்த நாவல். பின்னர் படிப்படியாக உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. முதல்முறையாக 1979-ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மாஸ்கோ பதிப்பாக வெளிவந்தது.
டால்ஸ்டாயின் மற்ற நாவல்களுக்கும் புத்துயிர்ப்பு நாவலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், பல ஆண்டுகள் (1889-1899) உழைப்பைச் செலுத்தி, பாடுபட்டு பல்வேறு தேடல்களுக்கும் தயக்கங்களுக்கும் பரிசீலனைக்கும் பின் எழுதப்பட்ட நாவல். அலெக்ஸாண்டர் கோனி என்ற ஒரு வழக்கறிஞர், தான் சந்தித்த வழக்கு ஒன்றைப் பற்றி டால்ஸ்டாயிடம் கூறியதன் தொடர்ச்சியே 'புத்துயிர்ப்பு' நாவல் உருவாகக் காரணம்.
Be the first to rate this book.