ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளுடன் காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற மனிதர்களின் ஆர்வம்தான் கண்டுபிடிப்புகளுக்கு வழிசெய்திருக்கிறது. இயற்கையாக உருவான நெருப்பைக் கண்டு முதலில் பயந்த மனிதன், பிறகு அந்த நெருப்பை எப்படிக் கட்டுப்படுத்துவது, எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பது பற்றி அறிந்துகொண்டபோது, பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தான். பின்னர் சக்கரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. அது மனிதனை இன்னும் வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.
இப்படிப் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கண்டுபிடித்த ஏராளமான விஷயங்களால்தான் இன்று அறிவியலில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டிருக்கிறது. ஆனால், இன்றும் மனிதனால் கண்டுபிடிக்க முடியாமல், மனிதனால் அறிந்துகொள்ள முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தன்னுடைய அறிவாலும் அறிவியல் தொழில்நுட்பத்தாலும் அறியாதவற்றையும் அறிந்துகொள்வதற்குத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறான் மனிதன்.
Be the first to rate this book.