கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கல்வித்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். தன் கல்விசார் அமைப்புகள் மூலமாகச் செய்து வந்திருக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான முயற்சிகளை இந்நூல் சரியாகத் தொகுத்து வழங்கியிருக்கிறது. இத்தொகுப்பு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக மடைமாற்றம் செய்து பொது அங்கீகார முத்திரையைப்பதிக்கும் பணியை மட்டுமே கஸ்தூரிரங்கன் குழு செய்திருக்கிறது என்கிற அச்சம் தரும் உண்மை இந்நூலில் வெளிப்படுகிறது. பிரதமர் தலைமையிலான ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்கின் ஆளுகையின் கீழ் இந்தியாவின் ஒட்டுமொத்தக் கல்வியையும் கொண்டுவரும் இவ்வரைவு கல்வியில் நிலவ வேண்டிய ஜனநாயகம், அறிவுச் சுதந்திரம் இரண்டையும் சவக்குழிக்குத் தள்ளுகிறது. அரசியல் தலையீடுள்ள வணிகமயமாக்கப்பட்ட ஒரு துறையாகக் கல்வித்துறையை இவ்வரைவறிக்கை மாற்றியுள்ளதை அறிக்கையின் பக்கங்களுக்கு ஊடாகப் பயணம் செய்து விளக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.