2014 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை தமிழுக்கு அறிமுகமான புதிய எழுத்தளர்களின் தேர்வு செய்யப்ப்ட்ட 30 சிறுகதைகளின் தொகுப்பு இது. ஒரு கால கட்டத்தின் அகத்தை பிரதிபலிக்கும் கதைகள் இவை.
எளிய வாசிப்பு முதல் அதிதீவிர வாசிப்பு வரை அனைத்து விதமான போக்கும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒரு தேர்ந்த வாசகன் இத்தொகுப்பின் கடைசிக் கதையின் கடைசி வரியை வாசிக்கும் வரை பெரும் இலக்கிய அனுபவம் சித்திக்கும் வகையில் இத்தொகுப்பு தன்னை வடிவமைத்துக் கொண்டதில் ஒரு பதிப்பாளனாக கர்வம் கொள்கிறேன். ஒவ்வொருவருடைய கதையிலும் ஏதோ ஒரு வரி ஏதோ ஒரு தருணம் அல்லது கதையின் உறைநிலைத் தருணம் நம்மை நிச்சயம் முழுமையாக ஆட்கொண்டுவிடும். இத்தொகுப்பை வாசிக்கும்போது நிச்சயம் ஒருவன் தன்னைப் புதுமனிதனாக உணர முடியும். அவ்வகையில் காலத்தின் புதிய மனிதனாக மாற்றிக்கொள்ள இத்தொகுப்பு உங்களுக்கான அனுமதிச் சீட்டு என்பதில் எனக்கு கடுகளவும் ஐயமில்லை.
Be the first to rate this book.