இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது. இந்நூல் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை விமரிசனப்பார்வையில் அணுகி அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறது. அவர்களை சூழலிலும் மரபிலும் வைத்துப் பரிசீலிக்கிறது விமரிசனம் என்பது எப்போதும் ஒரு விவாதமே. தீர்ப்போ அளவீடோ அல்ல. இந்நூலும் சமகாலத்தின் ஆக்கங்கள் மீது விவாதங்களையே உருவாக்குகிறது. விவாதிப்பதன்மூலம் இப்படைப்பாளிகளை நாம் நெருங்கிச்செல்கிறோம்.
Be the first to rate this book.