கதை சொல்லும் கதை
வரலாறுகள் கதைகளாக மக்களிடம் பகிரப்பட்டு தலைமுறைகளுக்கு அவை நினைவுபடுத்தப்பட்ட காலச்சூழல் இன்று இல்லாமல் போனது. மாறாக வெற்றுக்கதைகள் வரலாறுகளாகத் தலைமுறைகளிடம் திணிக்கப்படுகிற அவலத்தின் பிடியில் இன்று உள்ளோம்.
“உங்களின் சொல்லப்படாத கதையை உங்களுக்குள் தாங்குவதைவிடப் பெரிய வேதனை எதுவும் இல்லை” என்கிற மாயா ஏஞ்சலோவின் கூற்றைப்போல மனித வாழ்வியலில் கதைகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. நம் பதியப்படாத கதைகள் விளிம்பு மக்களின் வாழ்வியல் பதிவுசெய்யப்படவேண்டிய கட்டாயச்சூழலில் கவிவாணனின் புதிர் வினை சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது.
“நாம் அனைவரும் கதைசொல்லிகள். நாம் அனைவரும் கதைகளின் வலையமைப்பில் வாழ்கிறோம். கதைசொல்லலைக் காட்டிலும் மக்களிடையே வலுவான தொடர்பு இல்லை” என்கிறார் சர்வதேச கதை சொல்லும் மையத்தின் இயக்குநர் ஜிம்மி நீல் ஸ்மித்.
கலை, இலக்கியத்தின் மூலம் மட்டுமே மக்களை நெருங்கி அவர்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும். கதைகளால், கவிதைகளால் நம் வாழ்வைப் பேசுவோம். வலிகளைப்பேசுவோம். தோழர் கவிவாணனின் புதிர்வினை நூலை தமிழ் அலை வெளியிடுவதில் மகிழ்ச்சிக்கொள்கிறது.
அன்புடன்
இசாக்
Be the first to rate this book.