5,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களும், ராணிகளும் தலைநகர் கெய்ரோவுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்சார் என்ற இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் வாழ்வார்கள் என்று எண்ணி அவர்கள் உடலோடு விலை மதிப்பில்லாத புதையல்களும் புதைக்கப்பட்டன. இத்தகைய கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிப்பை தரும் "பிரமிடுகள்" உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இளம் வயதில் அரியணை ஏறிய மன்னர் டூடங்காமுன். 19 வயதில் மரணம் அடைந்தார். "மம்மி"யாக்கப்பட்ட அவரது கல்லறைப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய உண்மை வரலாற்றை ஆசிரியர் அமுதன் இந்த நூலில் சுவைபட சொல்லியுள்ளார். பக்கத்துக்குப் பக்கம் வண்ணப் படங்கள். நம்மை திகிலோடும் திகைப்போடும் எகிப்துக்கே அழைத்துச் செல்கிறார். "புதையலை"த் "தோண்டி" எடுத்து தங்கப் பொக்கிஷங்களை மட்டுமல்ல, எகிப்து நாட்டின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் வெளியே கொண்டு வந்துள்ளார்.
Be the first to rate this book.