A Raw and masculine perverted novel.
இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.
நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.
– சாரு நிவேதிதா
Be the first to rate this book.