வரலாற்றிலும் பிற்போக்கு சக்திகளின் கை ஓங்கிய காலகட்டங்கள் இதற்கு முன்னரும் இருந்துள்ளது. அவை புரட்சி அலைகளுக்கே வித்திட்டுள்ளன. 1848ல் ஐரோப்பிய புரட்சிகளின் தோல்வியைப் பற்றி, ‘ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ என்ற புத்தகத்தில் எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:
"ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் புரட்சிகர கட்சிகள் இதை விட ஒரு பெரிய தோல்வியை சந்தித்துவிட முடியாது. அதனாலென்ன? ஒவ்வொரு புரட்சிகர எழுச்சிக்குப் பின்னாலும், நிலவும் அமைப்புகளால் தீர்க்கமுடியாத சமூகத் தேவைகள் இருக்கும் என்பது அனைவருமே இன்று அறிந்திருக்கின்றனர். நாம் தோல்வியடையும் பட்சத்தில், மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதைத் தவிற வேறென்ன வழி இருக்கிறது."
Be the first to rate this book.