தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.
இப்படியானதொரு கொடூரமான சூழலில், ஆல்பர்ட் காம்யூவின் ‘புரட்சியாளன்’ நேரடியாக ஃபிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுக் கிடக்கும் நம் இருப்பைப் புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும். வாழ்வு குறித்தும் மனிதம் படும் வாதை குறித்தும் நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் உள்ள தீவிரமான ஈடுபாட்டோடு கூடிய தேடல் உணர்வுதான், இத்தகையதொரு கடும் உழைப்பைக் கோரும் மொழிபெயர்ப்பு வேலைப்பாட்டினைச் சாதித்துக் காட்டியிருக்கிறது.
-முன்னுரையில் க. பஞ்சாங்கம்
Be the first to rate this book.