புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன் சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை, சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை, வீரம் மிக்க தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை, உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் என்பதாக அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி தர்க்கம் புரிகிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.
தனது கொடுங்கோன்மையை எதிர்த்துக் கிளம்பும் குரல்களையும் கூட காலவோட்டத்தில் உண்டுசெரித்துவிடுவது இந்துத்துவ பார்ப்பனியத் தந்திரம். அதே வகையில், தன் வாழ்நாளெல்லாம் இந்து மதத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்துநின்ற அம்பேத்கரையும் அவரின் மரணத்திற்குப் பிறகு தன்வயப்படுத்திக் கொள்வதற்காக இந்துத்துவம் மேற்கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியே இந்நூல்.
1 Worst
Raja 12-10-2020 11:17 pm