வரலாறு என்பது ஒரு பள்ளிப்பாடம், புரட்சி என்பது வெறும் சொல் என்ற மனநிலைக்குள் தள்ளப்படும் குழந்தைகளுக்கு, வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடுகிறது.
ஆயுதம் ஏந்துவது மட்டுமே புரட்சியல்ல. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒவ்வொரு நிகழ்வும் புரட்சிதான். சமூகமே எதேச்சதிகாரத்தை ஏற்று மௌனமாக இருக்கும்போது, அதற்கு எதிராக ஒற்றைக் குரலாய் ஒலிப்பவன் - புரட்சியாளன். அப்படிப்பட்ட 16 புரட்சியாளர்கள்பற்றிய அறிமுகமே இப்புத்தகம்.
இந்த ஆளுமைகள் வெவ்வேறு காலக்கட்டங்களை, நாடுகளை, பண்பாடுகளை, சமூக, பொருளாதார அடுக்குகளைச் சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே புள்ளி - இவர்கள் அடக்குமுறையை எதிர்த்தவர்கள் என்பதுதான்.
Be the first to rate this book.