கி.பி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து புறநானூற்றுப் பாடல்கள் உரையாசிரியர்களால் இலக்கண இலக்கிய உரைகளில் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. புறநானூறு தொடர்ந்து மரபாகப் பயிலப்பட்டு வந்ததை இது மெய்ப்பிக்கிறது. புறநானூறு எப்படி எடுத்தாளப்பட்டது; எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதையும் மூலபாட ஆய்வின் மூலமாக உரையாசிரியர்கள் எந்தச் சுவடிக் குடும்பத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதையும் கண்டறிவதற்கு இந்தத் தொகுப்பு உதவும். மூலபாட ஆய்வின் மூலம் புறநானூற்றுக்குத் தேர்ந்த ஒரு செம்பதிப்பைக் கொண்டுவரவும் இந்தத் தொகுப்பு பெரிதும் பயன்படும். புதிய பாடங்கள், புதிய திணை-துறைக் குறிப்புகள், புதிய உரைகள், விளக்கங்கள் இந்தத் தொகுப்பின் மூலம் புறநானூற்றுக்குக் கிடைத்துள்ளன. செவ்வியல் தொகுப்பான புறநானூற்றின் ஆயிரமாண்டு கால வரலாற்றைப் புரிந்துகொள்ள இந்தத் தொகுப்பு துணைநிற்கும்.
Be the first to rate this book.