புறாக்காரர் வீடு இத்தொகுப்பின் முக்கியமான ஒரு சிறுகதை. பிள்ளைகளைப் போல புறாக்களை பாசத்துடன் வளர்க்கும் அப்பா, புறாக்கள் வளர்ந்து பெரிதாவதுபோல பிள்ளைகும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். இக்கதை முடிவில், பாலகுமார் சொன்ன கதையிலிருந்து, சொல்லாத கதையை என் மனத்தால் உய்த்தறிய முடிகிறது
மணமுறிவு நாள் சிறுகதையும் துயரம் படிந்த வரிகளால் ஆனது. மணமுறிவுக்கான ஆணை வழங்கப்படும் நாள் தான் கதையின் களன். அந்த ஆணை அறிவிக்கப்பட்ட கணத்தில் ஒரு மாபெரும் விடுதலை உணர்வை நாயகனின் மனம் உணர்கிறது. புறப்படுவதற்கு முன்பாக ஒரு தேநீர் அருந்துவதற்காக கடைக்குச் சென்று அமர்ந்த கணத்தில் ஏதோ ஒரு குழந்தை தன் அப்பாவைப் பார்த்து “அப்பா” என அழைக்கும் குரலைக் கேட்டு ஒரு கணம் திடுக்கிட்டு உறைந்து போகிறான். லேசான மனத்தில் பாரங்கள் மீண்டும் ஏறி அழுத்தத் தொடங்குகின்றன
- எழுத்தாளர் பாவண்ணன்
Be the first to rate this book.