'உலகம்சுற்றியமுதல்தமிழர்' என்று ஏ.கே.செட்டியாரைப் பற்றி ஒரு பிம்பம் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மையில்லை. செட்டியார் ஒன்றும் உல்லாசப்பயணியில்லை. அவர் உலகம் முழுக்க சுற்றித் திரிந்ததற்குப் பின்னால், ஓர் ஆவணப் பசி அடங்கியிருந்தது. காந்திகுறித்த ஆவணப் படத்தை தயாரிக்கவே ஊர் ஊராய்ச் சுற்றிசருகாய்மெலிந்தார். அதே ஆவணத்தேவைதான் அவரை இந்த சுதேசமித்திரன் கடிதங்களை தொகுக்கச் செய்திருக்கிறது. 'ஜனவாக்கே தெய்வவாக்கு' என்பது சுதேசமித்திரனின் முகப்புச்சொல். இதற்குச் சரியான சாட்சியம் இந்தப் 'புண்ணியவான்காந்தி'. தென்னாப்பிரிக்க விடுதலையில் இந்தியத் தமிழனின் பங்குப் பற்றி தரச் சான்று தரும் தரமான வரலாற்றுப் பிரதி. இந்தப் புத்தகம் இன்று நம்கை வசமில்லை. தேடினாலும் கிடைக்காத அரியபொருள். அவசியம் கருதியோ, ஆவணத் தேவையின் பொருட்டோ அறிஞர்கள் கூட தமது அடிக்குறிப்பில் சுட்டாத இந்நூல், காலம் காணடித்த ஒருகைக் கடிகாரம்; புழுதியில் புதைந்துபோன காந்தியின் பை கடிகாரம்.
Be the first to rate this book.