தஞ்சை மண்டலத்துக் குடியானவர்களின் வாழ்க்கை எனும் வரைபடத்தின் வழியே நுண்ணிய மானுடச் சித்திரங்கள் அவற்றின் அசல்தன்மையோடு இந்தக் கதைகளில் பதிவாகியிருக்கின்றன. நனவிலி மனத்தின் கடிவாளங்களை மீறும் நினைவோட்டங்களை மையமாகக் கொண்ட இச்சித்திரங்கள், சிறுகதை நெறிகளை அசட்டையாகக் கையாண்டிருக்கும் அதே வேளையில் செய்நேர்த்தியில் அதீத ஒழுங்கைக் கொண்டிருப்பவை.
ந. முத்துசாமியின் கதைகள் வழுக்கிக்கொண்டு போகும் மிக இலகுவான நடையில், எவ்விதச் சிடுக்கும் இல்லாத விவரணைகளைக் கொண்டிருக்கும் எளிய வடிவங்களாக விளங்குகின்றன. உள்ளடுக்குகளுக்குள் ஊடுருவிச் சென்று வாசிப்போரை அவரவரின் ஊன்றலைப் பொறுத்து வெவ்வேறு தளங்களில் இறக்கிவிட்டுப் போகும் திக்குத் தெரியாத கண்கட்டு ஆட்டமாகவும் இவை மறுமுகம் கொண்டிருக்கின்றன.
Be the first to rate this book.