இந்தியாவில் தேவதாசிமுறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் மதம், பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் அந்த அவலம் இன்றும் தொடர்கிறது. மூடநம்பிக்கைகளும் காலத்துக்குப் பொருந்தாத சடங்குகளும் பெண்களை இப்போதும் வரலாற்றின் புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன. பத்திரிகையாளரான அருண் எழுத்தச்சன் இந்தியா முழுவதும் எட்டாண்டு காலம் பயணம் செய்து தேவதாசி மரபின் எச்சங்களையும் அந்த மரபுக்கு இரையாக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் காண்கிறார். தரவுகளின் அடிப்படையிலும் நேர்அனுபவத்தின் பின்புலத்திலும் உண்மைகளை இந்த நூலில் முன்வைக்கிறார்
Be the first to rate this book.